திங்கள், 7 டிசம்பர், 2009

ஸ்பெயின் நாட்டில் அடைக்கலம் கேட்கும் பின்லேடன் மகன் !

சர்வதேச பயங்கரவாதியும், அல்கொய்தா தீவரவாத இயக்கத்தின் தலைவருமான ஒசாமா பின்லேடனின் மகன் ஒமர் (வயது 27) பின்லேடனின் 19 மகன்களில் இவரும் ஒருவர்.இவர் இங்கிலாந்தை சேர்ந்த ஜானெ பெலிஸ்- பிரவுனே என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இப்பெண் ஏற்கனவே திருமணமாகி 5 குழந்தைகளை பெற்றவர். இவர் லண்டனில் தங்கியிருக்க இங்கிலாந்து அரசு மறுத்துவிட்டது. எனவே இவர் எகிப்தில் இருந்து செஷிரில் உள்ள மோல்தான் கிராமத்துக்கு புறப்பட்டார். இவர் சென்ற விமானம் ஸ்பெயினில் உள்ள மாட்ரிட்பாரஜாஸ் விமான நிலையத்தில் தரை இறங்கியது. இதற்கிடையே அவர் அங்கு வருவதை அறிந்த ஸ்பெயின் போலீசார் ஒமரை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.அப்போது அவர் ஸ்பெயின் நாட்டில் தங்க அடைக்கலம் கேட்டார். இது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு பத்திரிக்கையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக