செவ்வாய், 8 டிசம்பர், 2009

கிளிநொச்சியில் இடம்பெயர்ந்து வவுனியாவிலுள்ளோர் வாக்களிக்க கொத்தணி வாக்களிப்பு நிலையங்கள் !

கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா மாவட்டத்தில் தங்கியிருப்போர் வவுனியா கொத்தணி வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிக்கும் முறைகுறித்து அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார். இதன்படி கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா மாவட்டத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் தங்கியிருப்போர் 2010ம் ஆண்டுக்குரிய வாக்களிப்பு விண்ணப்பப்படிவத்தை இலக்கம் 88ஏ, கோவில்வீதி, குருமண்காடு, வவுனியா என்ற முகவரியில் இயங்கும் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேரடியாக பெற்று கிராம அலுவலரின் உறுதிப்படுத்தலுடன் மீள ஒப்படைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக