தமிழக மீனவர்களின் பாதுகாப்பு கருதி இலங்கையுடன் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படுமென இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா தெரிவித்துள்ளார். அத்துடன் கச்சதீவு தொடர்பாக செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தினை மத்திய அரசு இரத்துச்செய்ய மாட்டாதெனவும் அவர் கூறியுள்ளார். மாநிலங்களவையில் நேற்று தமிழக மீனவர்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. இதன்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் முகமாகவே வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா இவற்றைத் தெரிவித்துள்ளார். இலங்கை அரசுடன் கைச்சாத்தாகவுள்ள இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்னும் சில நாட்களில் கைச்சாத்திடப்படவுள்ளது. கச்சதீவுப் பிரச்சினையானது முடிந்துபோன விடயமாகும். அந்த ஒப்பந்தத்தை இரத்துச் செய்வதென்ற பேக்சுக்கே இடமில்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செவ்வாய், 8 டிசம்பர், 2009
கச்சதீவு ஒப்பந்தம் இரத்துச் செய்யப்பட மாட்டாதென இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு !
தமிழக மீனவர்களின் பாதுகாப்பு கருதி இலங்கையுடன் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படுமென இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா தெரிவித்துள்ளார். அத்துடன் கச்சதீவு தொடர்பாக செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தினை மத்திய அரசு இரத்துச்செய்ய மாட்டாதெனவும் அவர் கூறியுள்ளார். மாநிலங்களவையில் நேற்று தமிழக மீனவர்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. இதன்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் முகமாகவே வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா இவற்றைத் தெரிவித்துள்ளார். இலங்கை அரசுடன் கைச்சாத்தாகவுள்ள இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்னும் சில நாட்களில் கைச்சாத்திடப்படவுள்ளது. கச்சதீவுப் பிரச்சினையானது முடிந்துபோன விடயமாகும். அந்த ஒப்பந்தத்தை இரத்துச் செய்வதென்ற பேக்சுக்கே இடமில்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக