
அவசரகால சட்டம் 74 மேலதிக வாக்குகளினால் இன்றையதினம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவசரகால சட்டத்தினை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிப்பதற்கான விவாதம் நாடாளுமன்றில் இன்று இடம்பெற்றது. விவாதத்தின் பின்னர் இடம்பெற்ற வாக்கெடுப்பின்போது அவசரகால சட்டத்திற்கு ஆதரவாக 95வாக்குகளும், எதிராக 21வாக்குகளும் அளிக்கப்பட்டன. அவசரகால சட்டத்திற்கு ஆதரவாக ஆளும் கட்சியுடன், அதனுடன் இணைந்துள்ள கூட்டணிக் கட்சிகளும் வாக்களித்திருந்தன. எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும், ஐ.தே.கட்சியின் இரு உறுப்பினர்களும் வாக்களித்திருந்தனர். வாக்கெடுப்பின்போது ஜே.வி.பி சபையில் பிரசன்னமாகி இருக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை நாடாளுமன்றத்தில் இன்றையதினம் முன்வைக்கப்பட்டிருந்த 16 பிரேரணைகளும் நிறைவேற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக