ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குமிடையில் மீண்டுமொரு சந்திப்பு இவ்வாரம் நடைபெறவுள்ளது. இச்சந்திப்பில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்வார்களென எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் வட மாகாணச் செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷவும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தவும் சந்திப்பொன்றுக்கான அழைப்பொன்றை விடுத்துள்ளதாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளருமான மாவை எஸ்.சேனாதிராசர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்னமும் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லையெனத் தெரிவித்த சேனாதிராசா எம்.பி. அரசாங்கத் தரப்பைச் சந்தித்ததன் பின்னர் தீர்மானிக்கப்படும் எனக் கூறியுள்ளார். அரச தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாளைமறுதினம் கூடி ஆராய்ந்ததன் பின்னர் அறிவிக்கப்படுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுத் தலைவரான இரா.சம்பந்தன் கடந்த புதன்கிழமை காலை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இதன்பின்னர் கூட்டமைப்பின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்திப்பதற்கு ஜனாதிபதி அழைத்திருப்பதாகக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரொருவர் கூறியிருந்தார். இதனிடையேதான் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷவும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்தவும் அழைத்துள்ளனர். பெரும்பாலும் இந்தச் சந்திப்புக்கள் அனைத்தும் ஜனாதிபதியின் தலைமையில்
திங்கள், 7 டிசம்பர், 2009
ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குமிடையில் மீண்டுமொரு சந்திப்பு !

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக