யுத்தத்திற்குப் பின்னரான பலவிதமான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும் அரசாங்கம் அதனைச் செய்து முடிக்கும் பொறுப்பின் பெரும்பகுதியை சீனாவிற்கு வழங்கியுள்ளது எனச் செய்திகள் வெளியாகியுள்ளன. பலாலி காங்கேசன்துறை ரயில்பாதை, மதவாச்சி தலைமன்னார் ரயில்பாதை, யாழ்ப்பாண வீதிகள் புனரமைக்கும் பணி உட்படப் பெருமளவு அபிவிருத்தித் திட்டங்களை இலங்கை அரசு சீனாவிற்கு வழங்கியுள்ளது. இதற்கான நிதியாக அந்நாட்டு வங்கியிடமிருந்து உயர்வட்டிக்குப் பல்லாயிரம் கோடி ரூபாவைக் கடனாக இலங்கை பெறுகின்றது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் யுத்தத்திற்குப் பிந்தைய அபிவிருத்தித் திட்டங்களின் பெரும்பகுதியை சீனாவே பொறுப்பெடுத்துள்ளது. சுமார் எழுநூறு கோடிரூபா பெறுமதியிலான அபிவிருத்தித் திட்டங்களை அது முன்னெடுக்கிறது. இதற்கான நிதி சீனாவின் எக்ஸிம் வங்கியிலிருந்தே பெறப்படுகின்றது. இதன்காரணமாகப் பல வருடங்களுக்கு வட்டியுடன் இதனை மீளச்செலுத்த வேண்டியநிலையில் இலங்கை உள்ளது. வடக்கில் வீதிகளை நிர்மாணிக்கும் பொறுப்பு நான்கு சீன நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அக்டோபரில் அமைச்சரவை இது குறித்து தீர்மானித்தது. மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் செயலாளர் எஸ்.பி.திவாரட்ண வீதி அபிவிருத்தி அதிகாரசபையை சீன ஒப்பந்தக்காரர்களுடன் உடனடியாக ஒப்பந்தங்களைச் செய்யுமாறு கோரியுள்ளார். சீனாவின் தேசியவிமானத் தொழில்நுட்ப ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம், சீனத்துறைமுகம், சீன ரயில்வேசேவை உட்பட நான்கு நிறுவனங்களிடம் 9ஆயிரத்து 430கோடி ரூபா பெறுமதியான திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. சீனத்தரப்பு முன்னெடுக்கும் இந்தப் புனர்நிர்மாண அபிவிருத்தித் திட்டங்களில் இலங்கையர்கள் எவரும் பணியில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள். சீனாவைச் சேர்ந்த தொழிலாளர்களே ஈடுபடுத்தப்படுவர் என்றும் செய்திகள் கூறுகின்றன.
திங்கள், 7 டிசம்பர், 2009
யுத்தத்தின் பின்னரான அபிவிருத்திப் பணிகளின் பெரும்பகுதி சீனாவிற்கே !

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக