தம்மை விடுவிக்குமாறு வலியுறுத்தி வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டமொன்றினை இன்றுமுதல் ஆரம்பித்துள்ளனர். இதில் தமிழ் அரசியல் கைதிகளுடன், சிங்களக் கைதியொருவரும், பெண் கைதியொருவரும் உள்ளடங்கியுள்ளனர். இதேவேளை யாழ் மற்றும் அநுராதபுரம் சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளும் இதற்கு ஆதரவு தெரிவிக்கும்வகையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் சிறைச்சாலை அதிகாரி செனட் பெர்னான்டோ அதனை மறுத்துள்ளார். இந்த போராட்டத்திற்கு ஆதரவளிக்கும்வகையில் எதிர்வரும் வியாழனன்று வவுனியா மனிதஉரிமை காரியாலயம் முன்பாக கைதிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாகவும் தெரியவருகிறது.
செவ்வாய், 8 டிசம்பர், 2009
வவுனியா சிறைக்கைதிகள் சாகும்வரை உண்ணாவிரதம் !
தம்மை விடுவிக்குமாறு வலியுறுத்தி வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டமொன்றினை இன்றுமுதல் ஆரம்பித்துள்ளனர். இதில் தமிழ் அரசியல் கைதிகளுடன், சிங்களக் கைதியொருவரும், பெண் கைதியொருவரும் உள்ளடங்கியுள்ளனர். இதேவேளை யாழ் மற்றும் அநுராதபுரம் சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளும் இதற்கு ஆதரவு தெரிவிக்கும்வகையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் சிறைச்சாலை அதிகாரி செனட் பெர்னான்டோ அதனை மறுத்துள்ளார். இந்த போராட்டத்திற்கு ஆதரவளிக்கும்வகையில் எதிர்வரும் வியாழனன்று வவுனியா மனிதஉரிமை காரியாலயம் முன்பாக கைதிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாகவும் தெரியவருகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக