புதன், 9 டிசம்பர், 2009

கிரடிட்கார்ட் மோசடியில் 4இலங்கையர் இந்தியாவில் கைது!

தமிழ்நாட்டில் உள்ள கூடுவாஞ்சேரி என்னும் இடத்தில் சந்தேகத்திற்கு இடமாகச் சென்ற ஆட்டோவை நிறுத்திய பொலிஸார் அதில் பயணித்த நால்வரை விசாரித்துள்ளனர். ஒருவருக்கு ஒருவர் முரணான தகவல்களை கொடுத்ததால் அவர்கள் அனைவரையும் கைது செய்து பொலிஸார் மேலதிக விசாரணைக்காக கொண்டு சென்றுள்ளனர் விசாரணையின் போது அவர்களிடம் இருந்து சுமார் 50போலி கடன்அட்டை கைப்பற்றப்பட்டள்ளது. அத்துடன் பெறுமதிமிக்க கையடக்க தொலைபேசி லெப்டொப் மற்றும் ரொக்கப்பணமாக 9லட்சம் ரூபாவும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைதாகியிருக்கும் நால்வரும் சமீபத்தில் தனராஜ் என்ற இலங்கையரை சந்தித்ததாகவும் உயர் தொழில்நுட்ப முறையில் போலி கடன்அட்டைகளை தயாரித்து அவற்றை கொண்டு (ஏரிஎம்) தானியங்கி பணம் வழங்கும் நிலையத்தில் காசை இவர்கள் பெற்றுக் கொண்டுள்ளதுடன் கடைகளுக்கு சென்று பொருட்களையும் கொள்வனவு செய்துள்ளமை கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் இதனைத்தொடர்ந்து இவர்கள் விளக்கமறியலில் வைத்து விசாரிக்க பொலிஸார் உத்தரவிட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக