புதன், 9 டிசம்பர், 2009

புலிகள் அமைப்பைச் சேர்ந்த 100முன்னாள் உறுப்பினர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு !

புலிகள் அமைப்பைச் சேர்ந்த 100முன்னாள் உறுப்பினர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் வழிகாட்டல்களின் காரணமாக குறித்த நபர்கள் உயர்தரப் பரீட்சையில் தோற்றுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு பரீட்சைக்குத் தோற்றிய முன்னாள் புலி உறுப்பினர்களில் 100பேர் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். யாழ் பல்கலைக்கழகம் உள்ளிட்ட நாட்டின் ஏனைய பல்கலைக்கழகங்களில் தமது கல்வியை இவர்கள் தொடரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக