
ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் மேற்கொண்ட முதலாவது விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேவையற்ற செலவுகளை வரையறுத்திருந்தார்.
கடந்த 15ம் திகதி முதல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூன்று நாட்கள் இந்திய விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
இதற்கான மொத்தச் செலவு 57 லட்ச ரூபா என தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் இந்திய விஜயத்தின் போது சுமார் இரண்டு கோடியே அறுபது லட்ச ரூபா செலவிடப்பட்டுள்ளது.
இதன்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்திய விஜயத்தின் போது சுமார் இரண்டு கோடியே மூன்று லட்ச ரூபா செலவுகளை சேமித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாதாரண பயணிகள் விமானத்தில் பயணத்தை மேற்கொண்டதுடன், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விஜயங்களுக்காக பிரத்தியேக விமானங்களை பயன்படுத்தியிருந்தார்.
இவ்வாறு இந்தியாவிற்கு தனியாக விமானத்தைப் பயன்படுத்தி பயணம் செய்வதற்காக மட்டும் ஒருகோடியே பதினாறு லட்ச ரூபா செலவாகியுள்ளது என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக