பிரசன்ன ரணதுங்கவிடமிருந்து மேலும் மாகாண முதலமைச்சர் பதவியை பறிப்பதற்கு சதித் திட்டம் தீட்டப்படுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 18ம் திகதி நுகோகொடையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்சவிற்கு ஆதரவாக நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற காரணத்தினால் இவ்வாறு பிரசன்ன ரணதுங்கவிற்கு எதிராக கட்சிக்குள் கிளர்ச்சி வெடித்துள்ளது.
முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கு பதிலாக, மாகாண அமைச்சர் ரஞ்சித் சோமவன்சவை முதலமைச்சராக நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவர் இந்த சதித் திட்டத்தை மேற்கொள்கின்றார்.
ஆளும் எதிர்க்கட்சி மாகாணசபை உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் பிரசன்ன ரணதுங்கவை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த சதித் திட்டத்திற்கு சுதந்திரக் கட்சியின் பெரும்பான்மையானவர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர் என குறித்த சிரேஸ்ட சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக