
மஹிந்த ராஜபக்சவின் கடந்த வரவு செலவுத் திட்டத்திலோ அல்லது அதற்கு முன்னைய இரண்டு ஆண்டுகளில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திலோ அரசாங்க ஊழியர்களுக்கு ஒரு சதமேனும் சம்பளம் உயர்த்தப்படவில்லை.
முதல் தடவையாக அரசாங்க ஊழியர்களுக்கு இந்த மாதம் ஐயாயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
தனியார்துறை ஊழியர்களின் சம்பளங்களை உயர்த்துவது குறித்தும் பேசப்பட்டு வருகின்றது.
அரசாங்க ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்குவது குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசாங்க ஊழியர்களுக்கு சுயாதீனமான நீதிமன்றமொன்று கிடைக்கப்பெற்றுள்ளது.
எரிபொருள், எரிவாயு, சீனி, பால் மா, நெத்தலி உள்ளிட்ட பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
ராஜபக்ச அரசாங்கத்தினால் செய்ய முடியாதவற்றை மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியின் தலைமையிலான அரசாங்கம் இரண்டு வார காலத்தில் செய்துள்ளது.
கடந்த காலங்களில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட காரணத்தினால் இவ்வாறு சலுகைகள் நிவாரணங்களை வழங்க முடியவில்லையா?
பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல புலமைப் பரிசில் கொடுப்பனவு தொகை 5000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
நெல், கிழங்கு, பால் போன்றவற்றிற்கு உத்தரவாத அடிப்படையிலான விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
நல்லாட்சியின் மூலம் நாட்டின் அனைத்து மக்களுக்கும் நன்மைகள் வழங்கப்பட்டுள்ளது என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக