வெள்ளி, 30 ஜனவரி, 2015

தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினால் பரிசுப் பொருட்கள் அன்பளிப்பு.!!(படங்கள் இணைப்பு)

தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் அனுசரணையில் இன்றையதினம் கோவில்குளம் இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியின் பரிசளிப்பு விழாவிற்கான பரிசிப் பொருட்கள் அன்பளிப்பு செய்யப்பட்டது.

தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் கனடா கிளையினரால் அன்பளிப்பு செய்யப்பட்ட அன்பளிப்பு பொருட்கள் இன்றைய தினம் பழைய மாணவர்   சங்கத்தின் செயலாளர் திரு ந.நிமலன் அவர்களிடம் கழகத்தின் ஸ்தாபகரும், தமீழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களினால் கழகத்தின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் வைத்து வழங்கி வைத்தார். 

கழகத்தின் ஸ்தாபகரின் 54 ஆவது பிறந்த தினத்தையொட்டி தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் கனடா கிளையினரால் இப் பரிசுப் பொருட்கள் அன்பளிப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ் நிகழ்வில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஆலோசகர்களில் ஒருவரான திரு முத்தையா கண்ணதாசன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன், செயலாளர் திரு ஸ்ரீ.கேசவன், பொருளாளர் திரு த.நிகேதன், விளையாட்டு மற்றும் பன்முக வெளிக்கள  செயற்பாடுகளுக்கு பொறுப்பான திரு ம.சஞ்சீவன், ஊடகப் பிரிவைச் சேர்ந்த திரு செ.சுகந்தன் இவர்களுடன் வவுனியா இந்துக் கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் திரு நிரஞ்சன், பழைய மாணவர் சங்கத்தின் பொருளாளர் திரு ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.



தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஊடக அறிக்கை.!!
"கோவில்குளம் இளைஞர் கழகம்" எனும் பெயரில் கலை, கலாசார, சமூக அபிவிருத்தி திட்டங்களில் இயங்கிவந்த எமது கழகம் பெரியோர்கள், கல்விமான்கள், சமூக நலன் விரும்பிகளின் வேண்டு கோளிற்கிணங்க எமது இளைஞர் கழகமானது "தமிழ் தேசிய இளைஞர் கழகம்" எனும் பெயரில் இன்று (29/01/2015) தொடக்கம் இயங்கவுள்ளது.
குறித்த கிராமத்தின் பெயர் கொண்டு ஆரப்பிக்கப்பட்ட எமது கழகம் இன்று வவுனியா மாவட்டத்தில் மட்டுமல்லாது பல மாவட்டங்கள் மற்றும் புலம்பெயர் தேசங்களில் அங்கத்தவர்களை கொண்ட ஒரு கழகமாக வளர்ச்சி கண்டுள்ளது. எமது ஆலோசகர்கள் மற்றும் இளைஞர்களின் துடிப்பானதும் ஆக்கபூர்வமானதுமான செயற்பாடுகளினால் பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்களை சொற்ப காலத்தில் முன்னெடுக்கப்பட்டதினையும், திட்டங்களாக மக்கள் நலன் கருதிய செயற்பாடுகளான பேரூந்து தரிப்பு நிலையங்கள் அமைத்தலும், புனரமைத்தல், நூற்றுக்கணக்கான பாடசாலைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கியமை, பாடசாலைகளுக்கு தேவையான எம்மால் இயன்ற பௌதீக வளங்களை வழங்கியமை, மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான உதவிகள் வழங்கியமை, போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள், இளைஞர்களுக்கான விழிப்புணர்வு செயற்பாடுகள், சிறுவர், முதியோர் இல்லங்களுக்கான உதவிகள் மற்றும் சேவைகள் போன்ற பல்வேறு செயற்திட்டங்களை மக்கள் வெகுவாக பாராட்டியமை குறிப்பிடத்தக்கது. இவ் செயற்பாடுகளை பன்முகப்படுத்துவதே எமது கழகத்தின் பிரதான நோக்கமாகும்.
கிராம, நகர இளைஞர்கள் பலர் எம்முடன் இணைந்து செயலாற்ற முன்வந்துள்ளமையினாலும், பல்கலைக்கழகங்கள், கல்வியற் கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் பலர் எமது கழகத்தில் இணைந்து செயலாற்ற கேட்டுக் கொண்டதற்கிணங்க எமது கழகமானது "தமிழ் தேசிய இளைஞர் கழகம்" எனும் பெயரில் இயங்கவுள்ளது.
இனி வரும் காலங்களில் "சாதனை மண்ணில் சரித்திரம் படைப்போம்" என்ற மகுட வாசகத்துடன் மக்களுக்கான மக்கள் சேவையில் மகிழ்ச்சி அடைய எமது இளைஞர்கள் எம்மோடு தொடர்புகொள்ள முடியும்.
நன்றி.
ஊடக மற்றும் இளைஞர் தொடர்பக செயலணி,
தமிழ் தேசிய இளைஞர் கழகம்.
e-mail- TNYCvavuniya@gmail.com
phone - 0094766644059
0094775058672
0094770733719











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக