திங்கள், 15 டிசம்பர், 2014

அவுஸ்திரேலியாவில் பதற்றம் பயங்கரவாதிகளால் 20 பொதுமக்கள் சிறைபிடிப்பு..!!

அவுஸ்திரேலிய சிட்னி நகரத்தில் மார்டின் வீதியில் உள்ள லிண்டன்ட் கபே என்னும் கட்டிடத்துக்கு மேல் உள்ள விடுதியில் 20 பொது மக்கள் ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் சிட்னியில் ஆயுதம் தாங்கியவர்களால் 20 பொதுமக்கள் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர்.

மேல் மாடியில் ஒரு கருப்பு நிறத்திலான கொடியொன்று வெளியில் பறக்க விடப்பட்டுள்ளது. அந்தக் கொடியில் இஸ்லாமிய எழுத்துக்கள்
காணப்படுகின்றது.

இதன் காரணமாக விமானங்கள் அனைத்தும் வேறு இடங்களுக்கு திசை மாற்றப்பட்டு வருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக