திங்கள், 10 நவம்பர், 2014

ஐ.நா ஊடக அதிகாரி இலங்கைக்கு ஆதரவாக செயற்படுவதாக இன்னர் சிற்றி பிரஸ் குற்றச்சாட்டு..!!

ஐக்கிய நாடுகள் ஊடக அதிகாரி இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டு வருவதாக இன்னர் சிற்றி பிரஸ் ஊடகம் குற்றம் சுமத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் செய்தியாளர் பேரவையின் முன்னாள் தலைவர் கியாம்பாலோ பியோலி இவ்வாறு இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றார் என தெரிவித்துள்ளது.

பியோலி தனது மான்எட்டனில் அமைந்துள்ள வீட்டை, ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி பாலித கொஹனவிற்கு வாடகைக்கு விட்டுள்ளார்.

போர்க்குற்றச் செயல்கள் நிராகரிக்கும் வகையிலான இலங்கை அரசாங்கத்தின் கணொளியொன்று ஐக்கிய நாடுகள் செய்தியாளர் பேரவையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மாற்றுக் கருத்துக்களை வெளியிடும் சில ஊடக நிறுவனங்கள் செய்தி சேகரிப்பில் ஈடுபட தடைகள் ஏற்படுத்தப்படுவதுடன் அனுமதி மறுக்கப்படுகின்றது.


கடந்த சில காலங்களாகவே எமது நிறுவனத்திற்கு செய்தி சேகரிக்க தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன.

போர்க்குற்றச் செயல்களை நிராகரிக்கும் காணொளியை காட்சிப்படுத்த அனைவரினதும் அனுமதி பெற்றுக் கொள்ளப்படவில்லை.

பியோலியின் நடவடிக்கைளுக்கு சில ஊடகங்கள் ஆதரவளித்து வருகின்றன என இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக