யாழ்.மாவட்டத்தில் மலத் தொற்றுள்ள குளிர்பானங்களை உற்பத்தி செய்ததாக குற்றம் சுமத்தி 58 குளிர்பான உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில், மேற்படி அநீதிக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டத்தை இன்று நடத்தவுள்ளதாக குளிர்பான உற்பத்தியாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திடீரென குடாநாட்டில் இயங்கி வந்த 58 குளிர்பான உற்பத்தி நிலையங்கள் மலத் தொற்றுள்ள குளிர்பானங்களை உற்பத்தி செய்வதாக கூறி இழுத்து மூடப்பட்டன.
இந்நிலையில் மேற்படி திடீர் நடவடிக்கை நன்கு திட்டமிடப்பட்ட ஒரு அழிப்பு நடவடிக்கை என குளிர்பான உற்பத்தியாளர் கூட்டமைப்பு கூறிவருகின்றது.
இந்நிலையில் நேற்றைய தினம் ஒரு தொகுதி குளிர்பான உற்பத்தி நிலையங்களுக்கான தடை நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
எனினும் அவ்வாறு தடை நீக்கப்பட்டதாக கூறப்படும் உற்பத்தி நிலையங்கள் உண்மையில் தடை செய்யப்படாத உற்பத்தி நிலையங்களாகும் என மேற்படி அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
சர்வதேச மட்டத்திலும், தமிழ் மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியிருக்கும் இந்தப் பிரச்சினையை ஒடுக்கும் வகையில் அல்லது யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணி மனை மற்றும் சில ஊடகங்கள் சேர்ந்து நடத்திய குறித்த பிரச்சினையை மறைக்கும் வகையிலேயே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்தும், உண்மையான நிலை என்ன? என்பதை கண்டறியவும் உடன் நடவடிக்கை எடுக்கவும் கோரும் வகையில்இன்று காலை யாழ். துரையப்பா விளையாட்டரங்கிலிருந்து மேற்படி கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக உற்பத்தியாளர் கூட்டமைப்பு கூறியுள்ளது.
குறித்த கவனயீர்ப்பு போராட்டம் காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்படும், இதில் சமூக ஆர்வலர்கள், மனிதாபிமானிகள், உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் அமைப்புக்கள் கலந்து கொள்ளுமாறும் மேற்படி அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக