வடமாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் கொஸ்லந்த, மீரியபெத்தவிற்கு 04.11.2014 இன்று விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட இடத்திற்கு அவர் விஜயம் செய்தார்.
முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட மக்களையும் அவர் சந்தித்து குறுகிய அரசியல் நோக்குடன் செயற்படுவதனை அரசியல்வாதிகள் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
சுயலாப அடிப்படையில் செயற்படாது மண்சரிவு எச்சரிக்கை தொடர்பில் முன்கூட்டியே அரசியல்வாதிகள் கவனம் செலுத்தியிருந்தால் இந்த நிலைமையை தவிர்த்திருக்கலாம்.
இந்த துயர் மிகுந்த தருணத்தில் வடக்கிற்கும் மலையகத்திற்கும் இடையில் புதிய பிணைப்பு ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கத் தயார். பாதிக்கப்பட்ட சிறுவர் சிறுமியருக்கு அடைக்கலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட முடியும்.உதவிகள் கோரப்பட்டால் தேவையான உதவிகளை வழங்க வட மாகாணசபை நடவடிக்கை எடுக்கும் என விக்கினேஸ்வரன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக