செவ்வாய், 4 நவம்பர், 2014

ஐ.நா மனித உரிமை கமிட்டியின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரிப்பு..!!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை கமிட்டியின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
மூன்றாம் தவணைக்காக ஜனாதிபதிக்கு போட்டியிடக் கூடிய வகையில் அரசியலமைப்பில் திருத்தங்களைச் செய்த 18ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யுமாறு மனித உரிமை கமிட்டி அண்மையில் அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
எனினும் இ;ந்தக் கோரிக்கையை அரசாங்கம் முழுமையாக நிராகரித்துள்ளது.

நாடாளுமன்றினால் அங்கீகரிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட சட்டமொன்றை ரத்து செய்யுமாறு கோரும்அ அதிகாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை கமிட்டிக்கு கிடையாது என அரசாங்கத்தின் உயர் மட்ட முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

18ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை உள்நாட்டில் இயங்கி வரும் அரச சார்பற்ற நிறுவனமொன்றெ  மனித உரிமை கமிட்டியில் சமர்ப்பித்துள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.


ஐக்கிய நாடுகள் மனித உரிமை கமிட்டி  நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களில் தலையீடு செய்கின்றமை இந்தக் கோரிக்கைகளின் மூலம் வெளிச்சமாகியுள்ளது என அரசாங்கத் தரப்பு குற்றம் சுமத்தியுள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக