வட மாகாண பாடசாலைகளில் மஹிந்தோதய திட்டம் குறித்து விசேட செயலமர்வு நடத்தப்படுவதாகக் கூறி, பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரம் நடத்தும் செயற்றிட்டம் இன்று கிளிநொச்சி மாவட்டத்தில் தொடக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இன்றைய தினம் முழங்காவில் மகா வித்தியாலயத்தில் மேற்படி திட்டம் தொடக்கப்பட்டுள்ளது.
இதனை கிளிநொச்சி வலயகக்கல்வி பணிமனை ஒழுங்கமைத்து நடத்துகின்றது.
குறிப்பாக இந்த செயற்றிட்டத்தில் 9ம் வகுப்பிற்கு மேற்பட்ட மாணவர்களும், அவர்களுடைய பெற்றோர்களும், ஆசிரியர்களும் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும்.
அவர்கள் அனைவருக்கும் தனித்தனியாக செயலமர்வு நடத்தப்படுகின்றது.
செயலமர்வில் பேசப்படும் விடயம் என்னவென்றால்,
மஹிந்தோதய கல்வி திட்டம் எவ்வாறானது. அதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச என்ன நோக்கத்திற்காக கொண்டுவந்தார், அதன் மூலம் அடுத்த 5 வருடங்களில் இந்தப் பாடசாலைகள் எவ்வாறு வளர்ச்சியடையும் என்பனவே பேசப்படுகின்றது.
எனவே இது ஒரு அப்பட்டமான தேர்தல் பிரசார நடவடிக்கை என கிளிநொச்சி மாவட்ட கல்வியியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளதுடன், க.பொ.த சாதாரண தரம் மற்றும் முன்னோடி பரீட்சைகள் நடைபெறவுள்ள நிலையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடசாலைகளாக நடத்தினால், மாணவர்களுடைய நிலை என்ன?
மேலும் மாணவர்களையும் பெற்றோர்களையும் கொண்டு அப்பட்டமான தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்வது சரியா? என கேள்வி எழுப்பியுள்ளதுடன், இவ்விடயம் தொடர்பில் பொறுப்புவாய்ந்த தரப்புக்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக