அநுராதபுரம் நகரில் இயங்கிய சட்டவிரோத இரவு நேர களியாட்ட விடுதியை சுற்றிவளைத்து 12 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் எட்டு பெண்களும், களியாட்ட விடுதி உரிமையாளர், முகாமையாளர் உள்ளிட்ட மேலும் இருவர் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
விதிமுறைகளை மீறும் வகையில் களியாட்ட விடுதியொன்றை நடத்திச் சென்றமை, இரவு நேரத்தில் பெண்களை கடமையில் ஈடுபடுத்தியமை, மக்களுக்கு அசௌகரியம் ஏற்படும் வகையிலான ஒலிபெருக்கி பாவனை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் குறித்த களியாட்ட விடுதியை சோதனைக்கு உட்படுத்துவதற்கான அனுமதியை வழங்கியிருந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதே நேரம் அனுராதபுரம் இலங்கையின் புனித நகரங்களில் ஒன்றாக விளங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக