நாட்டில் பத்து மாவட்டங்களில் மண் சரிவு அபாயம் நிலவுவதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக கட்டட ஆராய்ச்சித் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஆசிரு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டில் பல பாடசாலைகளில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கண்டியில் 19 பாடசாலைகளின் நிலைமை மிக மோசமாக காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிடும் போதே ஆசிரு கருணாரட்ன இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் கூறுகையில்,
கண்டி, பதுளை, நுவரெலியா, மாத்தளை. களுத்துறை, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை உள்ளிட்ட பத்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம் காணப்படுகிறது.
இதற்கமைய நுவரெலியா மாவட்டத்தில் 254 இடங்களில் மண் சரிவு அபாயம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பதுளையில் 487 குடும்பங்கள் நுவரெலியாவில் 450 குடும்பங்கள் பாதிப்படைவதற்கான சாத்திய கூறும் தென்படுகின்றது.
அத்தோடு கண்டியில் 19 பாடசாலைகளில் மண்சரிவு ஏற்படும் சாத்திய கூறு தென்பட்டுள்ளது.
எனவே, குறித்த பாடசாலைகளுக்கு முடிந்தளவு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவுள்ளோம். இதன் காரணமாக பெரும் அபாயமுள்ள பாடசாலைகளை இடமாற்றம் செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும், நாடளாவிய ரீதியில் இவ்வாறு பல பாடசாலைகளின் நிலைமை காணப்படுகிறது. எனவே இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு முன்னெடுக்கவுள்ளது.
அத்தோடு மண் சரிவு அபாயம் உள்ள வீதிகள் அதிவேக பாதைகளுக்கு அனர்த்தம் ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக