வியாழன், 30 அக்டோபர், 2014

வட, கிழக்கு மக்களுக்கு வரவு செலவுத்திட்டத்தில் என்ன வழங்கப்பட்டுள்ளது சிவசக்தி ஆனந்தன்..!!

வடக்கு கிழக்கு மக்களுக்கு இந்த வரவு செலவுத் திட்டத்தில் என்ன வழங்கப்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.
போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்ப அரசாங்கம் உதவிகளை வழங்கவில்லை.

வடக்கு மக்களின் காணிகளை அரசாங்கம் பலவந்தமாக கைப்பற்றிக்கொண்டுள்ளது. அல்லது வேறும் நபர்கள் பலவந்தமாக குறித்த காணிகளில் குடியேற்றப்பட்டுள்ளனர். இது மிகவும் பாரதூரமான ஓர் நிலைமையாகும்.

மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. மக்கள் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படவில்லை.

வடக்கு கிழக்கில் தொடர்ந்தும் இராணுவ ஆட்சியே நீடித்து வருகின்றது.



இந்த வரவு செலவுத் திட்டத்தில் தமிழ் மக்கள் புறந்தள்ளப்பட்டுள்ளனர். சிங்கள மக்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வுத் திட்டங்கள் எதனையும் அரசாங்கம் வழங்கவில்லை. இதனால் மீண்டும் இனப்பிரச்சினைகள் எழக்கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன.

இந்த விடயங்கள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தாமை ஆச்சரியமளிக்கின்றது.

தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் காணிகள் அபகரிக்கப்பட்டு பௌத்தமயமாக்கல் மேற்கொள்ளப்படுகின்றது. நாட்டின் ஜனநாயகம் சீரழிழந்துள்ளது.

அதிகாரப் பகிர்வினை உரிய முறையில் மேற்கொள்வதற்கு அரசாங்கத்திற்கு தேவையில்லை.

தமிழ் மக்களின் விருப்பு வெறுப்புக்கள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்துவதில்லை.

சமூக நீதி மற்றும் நல்லாட்சியை நாட்டில் காணக்கிடைக்கவில்லை.

வெளிநாடுகளுக்கு அரசாங்கம் பொய் வாக்குறுதிகளை அளித்து காலத்தை கடத்துகின்றது என சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத்திட்ட விவாதத்தில் நேற்று பங்கேற்று நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக