வியாழன், 30 அக்டோபர், 2014

நுவரெலியாவில் மண்சரிவு அபாயம் 150 குடும்பங்கள் வெளியேற்றம்..!!!

நுவெரலியாவில் மண் சரிவு அபாயம் நிலவும் பிரதேசங்களிலிருந்து 150 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன.
தேசிய கட்டட நிர்மான ஆய்வு நிறுவனத்தின் ஆலோசனைக்கு அமைய இவ்வாறு 150 குடும்பங்கள், தமது இருப்பிடங்களை விட்டு வெளியேற்றயப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்காலிக அடிப்படையில் ஆபத்து நிலவக் கூடிய அபாயம் காணப்படும் பிரதேசங்களில் தங்கியிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

நுவெரலியா, ராகலை தியனில்ல மற்றும் கொத்மலை வௌன்டன் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 150 குடும்பங்கள் இவ்வாறு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்டச் செயலாளர் பீ.ஜீ. குமாரசிறி தெரிவித்துள்ளார்.

தற்காலிக இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு அனர்த்த நிவாரணப் பிரிவின் ஊடாக உதவிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


மண் சரிவு மற்றும் பாரிய கற்கள் சரிந்து விழக் கூடிய அபாயம் காணப்படும் பிரதேசங்களிலிருந்து குடும்பங்கள் அகற்றப்பட்டுள்ளன.

பதுளை ஹல்துமுல்ல கொஸ்லந்த மிரியபெத்த என்னும் இடத்தில் இடம்பெற்ற பாரிய மண்சரிவு அனர்த்தத்தை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நுவரெலியா மாவட்ட குடும்பங்கள் தற்காலிகமாக இடம் நகர்த்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக ஆறு பிரதேசங்களில் மண் சரிவு அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேகாலை, ரத்தினபுரி, மாத்தளை, பதுளை, நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு அபாயம் நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக