வியாழன், 30 அக்டோபர், 2014

ஐக்கிய நாடுகளின் பயங்கரவாத தடுப்புக்குழு யாழ்ப்பாணம் விஜயம்..!!!

ஐக்கிய நாடுகளின் பயங்கரவாத தடுப்பு நிபுணர்கள் நேற்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தனர்.
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே அவர்கள் யாழ்ப்பாணம் சென்றனர்.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை கேட்டுக்கொண்டமைக்கு இணங்க, பயங்கரவாத தடுப்பின் போது மனித உரிமைகள் உட்பட்ட விடயங்களின் நடைமுறை தொடர்பில் ஆராயும் முகமாகவே இந்த விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தக்குழு யாழ்ப்பாணத்தில் நடத்திய சந்திப்புக்கள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. எனினும் போரின் பின்னர் உள்ள நிலைமைகள் மற்றும் அபிவிருத்திகள் குறித்து இந்தக்குழு கலந்துரையாடல்களை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது விஜயத்தின் போது இந்தக்குழு, பயங்கரவாதம் இராணுவத்தினாரால் மாத்திரம் தோற்கடிக்க முடியாததது. அதற்கு தீர்க்கமான பேச்சுவார்த்தைகளும் அவசியம் என்று வலியுறுத்தவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தகவல் வெளியிட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக