ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இருக்கும் வரையில்ழ தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களினால் நாட்டை பிளவுபடுத்த முடியாது என பிரதி அமைச்சர் ஏர்ல் குணசேகர தெரிவித்துள்ளார்.
கட்சி, இன, மத மற்றும் மொழி பேதங்களைக் களைந்து அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்பட்டால் மட்டுமே நாடு பிளவுபடுவதனை தடுக்க முடியும்.
சர்வதேச ரீதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் எவ்வளவு தலை தூக்கினாலும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையின் ஊடாக ஜனாதிபதி மஹிந்த ஆட்சி செய்யும் வரையில் நாட்டில் பிரினவினைவாதம் ஏற்பட வாய்ப்பில்லை.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவை தோற்கடிக்க கடுமையான முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த முயற்சிகளை தோற்கடிக்கக் கூடிய சக்தி பொது மக்களுக்கு காணப்படுகின்றது என பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் கண்டியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் இந்தக் கருத்துக்களை பிரதி அமைச்சர் வெளியிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக