முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் 'பூபதி' மூத்த பிரஜைகள் இல்லம் இன்று சனிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது. வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு இந்த இல்லத்தை சம்பிரதாயபூர்வமாகத் திறந்துவைத்தார். 'பூபதி' மூத்த பிரஜைகள் இல்லம், பிரான்ஸை தளமாகக் கொண்டியங்கும் ரி.ஆர்.ரி வானொலி மற்றும் பிரான்ஸில் வசிக்கும் ஜெட் மார்க்கெட் உரிமையாளரான இராஜபூபதியின் மகன் மோகன் அவர்களினதும் நிதி பங்களிப்புடன்
நிறுவப்பட்டது.
பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கையளிக்கும் இந்த நிகழ்வு திருமதி அருந்ததி சிவசக்தி ஆனந்தனின் ஒழுங்கமைப்பில் ஓய்வுபெற்ற துணுக்காய் கல்வி வலய பணிப்பாளர் சிதம்பரப்பிள்ளை பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன, செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராகலிங்கம், வடமாகாண போக்குவரத்துத்துறை அமைச்சர் டெனிஸ்வரன், வடமாகாணசபை உறுப்பினர்கள் சி.சிவமோகன், து.ரவிகரன், மேரி கமலா குணசீலன், கனகசுந்தரசுவாமி, கூட்டமைப்பின் பிரமுகர் கந்தையா சிவநேசன், துணுக்காய் பிரதேசசபை உறுப்பினர் அமிர்தலிங்கம், கூட்டமைப்பின் லண்டன் கிளை உறுப்பினர் கு.மனோகர் உட்பட பலபர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக