வியாழன், 28 ஆகஸ்ட், 2014

விடுதலைப் புலிகளுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கிய பாரிய முகாம் கொளத்தூரில் இயங்கியதாம்!!


இந்திய இராணுத்தினரால் விடுதலைப் புலிகளுக்கு 1980 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்ட பாரிய முகாம் சேலம் மாவட்ட கொளத்தூர் கிராமத்தில் அமைந்திருந்ததாக தெ ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
மேட்டுர் அணையில் இருந்து 11 கிலோமீற்றர்
தூரத்தில் இந்த முகாம் அமைக்கப்பட்டிருந்து. இதில் விடுதலைப் புலிகளுக்கு நவீன ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

1984 ஆம் ஆண்டு முதல் இந்த முகாம் இயங்கி வந்தது. 1983 இலங்கையின் இன வன்முறையின் பின்னர் அன்றைய இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் பணிப்பின்பேரில் இலங்கையின் போராளிக் குழுக்களுக்கு ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இதற்கு அன்றைய தமிழக முதல்வர் எம் ஜி ஆரும் தமது முழுமை ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார்.

எனினும் கொளத்தூர் முகாமில் விடுதலைப்புலிகளுக்கு தற்பாதுகாப்பு பயிற்சிகளே வழங்கப்பட்டதாக இந்திய படையினர் தெரிவித்ததாக தெ ஹிந்து கூறியுள்ளது.

இலங்கையின் தமிழ் போராளிகளுக்கு தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் உத்தரபிரதேஸ் ஆகிய இடங்களில் பயிற்சிகள் வழங்கப்பட்டன.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக