சனி, 12 ஜூலை, 2014

வவுனியாவில், வட மாகாண சபை உறுப்பினரின் அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டது.!!!(படங்கள் இணைப்பு)

(ஓவியன்) வவுனியா மாவட்டத்திலிருந்து வட மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர் திரு ம.தியாகராசா அவர்களின் அலுவலகம், இன்றையதினம்(12/07) உத்தியோகபூர்வமாக வவுனியா வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில்  திறந்து வைக்கப்பட்டது. இவ் அலுவலகத்தின் பெயர்ப்பலகையினை உத்தியோக பூர்வமாக கௌரவ வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் , கௌரவ வட மாகாண சுதேச சுகாதார அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.

அலுவலக கட்டிடத்தினை முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதியின் வன்னி மாவட்ட இணைப்பாளருமாகிய திரு. சிவநாதன் கிஷோர் அவர்களுடன் பாரியாரும் இணைந்து திறந்து வைத்தனர்.


அலுவலகத்தினை வட மாகாண போக்குவரத்து மீன்பிடித்துறை அமைச்சின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு செந்தில்நாதன் மயூரன் அவர்கள் திறந்து வைத்தார். 

நிகழ்வில் உரை நிகழ்த்திய மாகாண சபை உறுப்பினர் திரு ம.தியாகராசா அவர்கள், இவ் அலுவலகமானது எனது சொந்த நிதியிலிருந்து அமைக்கப்பட்டு எமது மக்களின் குறைகேள் அலுவலகமாக செயல்படுவதுடன், ஏனைய மாகாண சபை உறுப்பினர்களும் இவ் அலுவலகத்தில் தமது பணிகளை முன்னெடுக்க கூடிய வகையில் அலுவலகம் அமையப்பெற்றுள்ளது. இதன் கிளைக்காரியாலயங்கள் செட்டிகுளம், நெடுங்கேணி பிரதேசங்களில் அமைப்பதற்கு ஏற்பாடுகள் என்னால் முன்னெடுக்கப்பட உள்ளதாகாவும் தெரிவித்தார்.

மூத்த கிராம அலுவலர் திரு அமிர்தலிங்கம் அவர்களின் சேவையினை பாராட்டி பிரதம விருந்தினர்களினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இவ் நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர்களான திரு இந்திரராசா, திரு தர்மபால செனவிரட்ன, நெடுங்கேணி பிரதேச சபையின் தவிசாளர் திரு மு.பாலசுப்பிரமணியம், வெங்கல செட்டிக்குள பிரதேச சபையின் தவிசாளர் திரு க.அந்தோணி, வவுனியா மாவட்ட பொலிஸ் தலைமைப்பீட பொறுப்பதிகாரி திரு எஸ்.எம்.சி.டி.கே.அபேரத்ன, சட்டத்தரணி திரு க.தயாபரன், வைத்தியர் கோணேஸ்வரன், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்)  , சுத்தானந்த இந்து இளைஞர் சங்க தலைவர் திரு சேனாதிராஜா, கிராம சேவையாளர் திரு வியஜரத்னம், மற்றும் பல மூத்த கிராம சேவையாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து நிகழ்வினை சிறப்பித்தார்கள்.



































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக