இலங்கை போக்குவரத்துப் பொலிசாரின் தலைமைக் காரியாலயத்தின் ஏற்பாட்டில் வீதி போக்குவரத்து விதிமுறை தொடர்பான பயிற்சிப் பட்டறை நிகழ்வு வெள்ளிக் கிழமை(11/07) வவுனியா நகரில் இடம்பெற்றது.
வவுனியாவின் ஒன்பது பாடசாலைகளைச் சேர்ந்த 500 மாணவர்களுக்கு இப் பயிற்சிப் பட்டறையும், வீதி ஒழுங்கு முறை பற்றிய விளக்கமளிப்பும் இடம்பெற்றது. முன்னதாக வீதிக்குறியீடுகள், சமிக்ஞைகள், போக்குவரத்து விதிகள் தொடர்பாக வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் விளக்கமளிப்பு செயலமர்வும், அதனைத் தொடர்ந்து வவுனியா நகர கண்டி வீதியில் விபத்துக்களை தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றிய காட்சிகளும் காண்பிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக