ஞாயிறு, 6 ஜூலை, 2014

நாடாளுமன்ற நிலையியல் கட்டளை சட்டத்தில் திருத்தம்...!!!

நாடாளுமன்ற நிலையியல் கட்டளை சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வருவது குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக சபாநாயகர் ஷமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது நாடாளுமன்ற சிறப்புரிமைகளை பயன்படுத்தி சபையில், வெளி நபர்கள் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர்.

குற்றம் சுமத்தப்படும் நபர்கள் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கும் பதில் கடிதங்களை நாடாளுமன்ற குறிப்பேட்டில் உள்ளடக்கும் வகையில் நிலையியல் கட்டளை சட்டத்தில் திருத்தங்களை செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியில் உள்ள நபர்களை நாடாளுமன்றத்திற்குள் வைத்து விமர்சிக்கிறனர். பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றனர். எனினும் அந்த நபர்களுக்கு பதிலளிக்க சந்தர்ப்பம் இல்லை.


நாடாளுமன்ற உறுப்பினருக்கு இருக்கும் சிறப்புரிமை காரணமாக அதற்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாது.

இதனால் அந்த நபர்களின் பதில்களை நாடாளுமன்ற குறிப்பேட்டில் உள்ளடக்க வேண்டும். இதனால் நாடாளுமன்ற நிலையியல் கட்டளை சட்டத்தில் திருத்தங்களை செய்ய வேண்டும் என நான் கருதுகிறேன் எனவும் ஷமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக