செவ்வாய், 24 ஜூன், 2014

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் விபத்து குடும்பஸ்தர் பலி..!!!!

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருவில் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று பிற்பகல் 12.45மணியளவில் எருவில் மகா வித்தியாலயத்துக்கு அருகில் இடம்பெற்ற இந்த விபத்தில் குருமண்வெளியை சேர்ந்த அழகுதுரை சபாநாதன் (46வயது) என்பவரே உயிரிழந்ததாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

வேகமாக வந்த மோட்டார் சைக்கிளும் மண் ஏற்றி வந்த கன்டர் வாகனமும் நேருக்கு நேர் மோதிய போது மோட்டார் சைக்கிளை செலுத்திவந்தவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் கன்டர் வாகனம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


இது தொடர்பிலான விசாரணையை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக