செவ்வாய், 24 ஜூன், 2014

வவுனியா நகரசபையின் கூரை மேல் ஏறி பெண்ணொருவர் போராட்டம்..!!

வவுனியா நகரசபையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி பணிக்காலம் நிறைவடைந்த இரு பெண்கள் இன்று காலை தொடக்கம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வவுனியாவில் கடந்த காலங்களில் டெங்கு நோய் பரவாமலிருப்பதற்காக நகரசபையினால் ஒப்பந்த அடிப்படையில் சுகாதார தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து 07 தொழிலாளர்களுக்கு ஒப்பந்த காலம் முடிவடைந்துவிட்டதாக நகரசபை செயலாளரினால் அண்மையில் கடிதமொன்று வழங்கப்பட்டு சேவை முடிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த 9ஆம் திகதி அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் ஆதரவுடன் ஒப்பந்தம் முடிவடைந்த 5 தொழிலாளர்கள்
போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

தொழிற்சங்கம் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளின் பின்னர் போராட்டம் முடிவுறுத்தப்பட்டு அதிகாரிகளின் முடிவுகளுக்காக காத்திருப்பதாக அச்சங்கத்தின் வவுனியா இணைப்பாளர் எஸ்.சித்திரன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று காலை தொழிற்சங்கம் மற்றும் நகரசபையினருக்கு எவ்வித அறிவித்தலும் வழங்காத நிலையில் இரு பெண்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதில் ஒரு பெண் நகர சபையின் கூரை மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பாக தொழிற்சங்கத்தின் இணைப்பாளர் எஸ். சித்திரன் கருத்து வெளியிடுகையில்,

எமது தொழிற்சங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்நிலையில் இவ் இரு பெண்களும் எமக்கு எவ்வித அறிவித்தலும் இல்லாது இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எமது சங்கம் இப் போராட்டத்திகு ஆதரவு தெரிவிக்கவில்லை என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக