ஞாயிறு, 22 ஜூன், 2014

ஞானசார தேரர் கைதுசெய்யப்படவேண்டும் அமைச்சர் வாசுதேவ கோரிக்கை....!!!!

அளுத்கம மற்றும் பேருவளை  சம்பவங்களுடன் தொடர்புடைய பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைதுசெய்யுமாறு  அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கோரிக்கை விடுத்துள்ளார்.
முஸ்லிம்களுக்கும், சிங்களவர்களுக்கும் இடையில் இனரீதியான முரண்பாட்டை உண்டு பண்ணியமை தொடர்பிலேயே அவர் கைதுசெய்யப்படவேண்டும் என்று அமைச்சர் கோரியுள்ளார்.

ஞானசார தேரருக்கு எதிராக முதலில் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அத்துடன் அவரை சார்ந்துள்ளவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று அமைச்சர் கேட்டுள்ளார்.

அளுத்கம சம்பவங்கள் அரசாங்கத்துக்கு அவப்பேற்றை கொண்டு வருவதற்காக திட்டமிட்டு செயற்படுத்தப்பட்டவையாகும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.



இதேவேளை அளுத்கமவில் தாக்குதல் நடத்தியவர்கள் பிரதேசத்தில் உள்ளவர்கள் அல்ல.

அவர்கள் வெளி மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள் என்பது தொடர்பில் ஜனாதிபதி விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக