ஞாயிறு, 22 ஜூன், 2014

இலங்கையில் ஜிகாத் அமைப்பினர் இல்லை பாதுகாப்பு அமைச்சு...!!!

ஜிகாத் அமைப்பினர் இலங்கையில் தங்கியிருப்பதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என்று இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கையின் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நேற்று முன்தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் இலங்கையில் ஜிகாத் அமைப்பினர் செயற்படுவதாக குற்றம் சுமத்தினார்.

எனினும் இதனை மறுத்துள்ள பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ருவான் வணிகசூரிய, இதற்கான எவ்வித சாட்சியங்களையும் படையினர் பெறவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் படையினர் பாதுகாப்பு விடயத்தில் அவதானத்துடன் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது இலங்கையை பொறுத்தவரை,  தமிழ் புலம்பெயர்வாளர்கள் என்ற பொது எதிரி மட்டுமே  சர்வதேச மட்டத்தில் செயற்படுவதாக ருவான் வணிகசூரிய குறிப்பிட்டார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக