செவ்வாய், 3 ஜூன், 2014

நிலவில் முதல் வீட்டை கட்டும் சுவீடன் கலைஞர்..!!!

நிலவில் சென்று இறங்கியவுடன் சுய மாக வடிவமைத்துக் கொள்ளும் வண்ணம் ஒரு வீட்டினை சுவீடன் நாட்டைச் சேர்ந்த கலைஞரும், தொழி லதிபருமான மைக் கேல் ஜன்பர்க் என்பவர் உருவாக்கி வருகின்றார்.

கடந்த 2003 ஆம் ஆண்டில் இந்த பணியை இவர் ஆரம்பித்தார். இதற்கான நிதியுதவி பலரிடமிருந்தும் பெறப் பட்டு வருகின்றது. கடந்த 2010 ஆம் ஆண்டில் பொரு ளாதார மந்தநிலை காரணமாக இந்த பணி தடைப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் தொடரப்பட்டுள்ள இந்த வீட் டின் உருவாக்கம் கிட்டத்தட்ட 75 சதவிகிதம் முடிந்து விட்டதாகக் கூறப்படுகின்றது.


சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் அமைக்கப்பட்டு வரும் இந்த வீடு மூன்றுக்கு இரண்டு மீற்றர் பரப்பளவும், 2.5 மீற்றர் உயரமும் கொண்டது. இது ஒரு மனிதன் வசிப்பதற்குப் போதுமான இடத்தைக் கொண்டிருக்கும்.

கார்பன் கட்டமைப்பின் மீது இதற்கெனத் தயாரிக்கப்பட்ட சிறப்புத் துணி கொண்டு இந்த வீடு உருவாக்கப்பட்டு வருகின்றது. நிலவில் சென்று இறங்கியவுடன் வாயு வினால் இந்த கூடாரத்தை நிரப்பிய பின்னர் சில நிமிடஙகளில் இந்த வீட்டின் கட்டமைப்பு சுயமாக உருவாகி விடும்.

அஸ்ட்ரோபோடிக் என்ற அமெரிக்க விண்வெளி தொழில்நுட்ப நிறுவனம் இந்த வீட்டை அடுத்த வருடம் ஒக்டோபர் மாதம் நிலவுக்கு எடுத்துச் செல்ல இசைந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக