செவ்வாய், 3 ஜூன், 2014

இணையங்களில் வெளிவந்த முன்னுக்கு பின் முரணான செய்திகளை வன்மையாக கண்டிக்கின்றேன்!! வ/த/ம/ம/வி அதிபர் திரு ம.ச.பத்மநாதன்....!!

தேசிய பாடசாலைக்கு கல்வி அமைச்சின் ஒதுக்கீடுகள் போதுமானதாக இல்லை, மாகாண ஒதுக்கீடுகள் எதுவும் இல்லாமல் கல்வி, விளையாட்டு, மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளின் அடைவு மட்டம் அதிகரித்த வண்ணமே உள்ளது. எனவே அதனை கருத்தில் எடுக்காத சில வலையமைப்புகள், பல்வேறு நிதிமோசடிகள் இடம்பெறுவதாகவும் பொறுப்பற்ற விதத்தில் வெளியிட்டமை எமது கல்விசமூகத்தை கொச்சைப்படுத்துவதாக அமைந்துள்ளதுடன், ஆக்கபூர்வமான சிந்தனையாளர்களை ஓரம்கட்டும் ஓர் செயற்பாட்டுக்கு உந்துதல் என தான் கருதுவதாகவும், அதிபரோ, ஆசிரியர்களோ ஒருபோதும் நிதிமோசடியில் ஈடுபடவில்லையெனவும் தெரிவித்தார்.அதிபர் மேலும் தெரிவிக்கையில்…


தேசிய மட்டங்களில் வருடம் தோறும் சாதனை படைக்கும் எமது பாடசாலை அகில இலங்கை ரீதியில் சிறந்து விளங்குவது அனைவருக்கும் தெரிந்ததே. இருந்தாலும் மாணவர்களின் சாதனை பயணங்களை ஒரு துளியேனும் இணையத்தளங்களில் பதிவேற்ற அவர்கள் மறந்துவிடுகிறார்கள்.

பாடசாலையில் நடக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் எட்டப்படும் நிலையில் பொறுப்பற்ற முறையில் இணையத்தளங்கள் நடந்து கொள்வது பாடசாலையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல் ஆகும்.பாடசாலையின் வளர்ச்சி பாதைக்கு இணையத்தளங்கள் ஊன்று கோலாக இருக்க வேண்டுமே தவிர முட்டுகட்டையாக இருக்க கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

பல்வேறு பட்ட நெருக்கடிகளுக்கு மத்தியில் இயங்கி வரும் எமது பாடசாலைக்கு மேலும் இணையத்தளங்களால் பிரச்சனைகள் எழுவது மனவேதனைக்குரிய விடயமாகும். சாவால்களுக்கு மத்தியிலும் எமது பாடசாலை பல அளப்பெரிய சாதனைகளை படைத்துவரும் என்று அதிபர் நம்பிக்கை தெரிவித்தார்.

பூர்வீகம் செய்திகளுக்காக நிகே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக