இந்நாட்டு முஸ்லிம்களைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையும், பொறுப்புமாகும் என்று சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதியமைச்சர் ஏ. ஆர். எம். அப்துல் காதர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:
முஸ்லிம்கள் பொறுமையாக இருக்க வேண்டும் சகிப்புத் தன்மையோடு நடந்துகொள்ள வேண்டும். நாம் ஏனைய சமூகங்களுடன் எப்போதும் போன்று ஒற்றுமையாகவும், புரிந்துணர்வுடனும் வாழவேண்டும். நாம் தனித்து வாழ முடியாது. தர்காநகர், பேருவளை அளுத்கம, வெலிப்பன்ன போன்ற பிரதேசங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அவை துரதிஷ்டமானதும் கவலைமிக்கதுமாகும்.
இச்சம்பவங்கள் தொடர்பாக பிரதி பொலிஸ் மா அதிபர் அனுரசேன நாயக்கவுடன் சுமார் ஒரு மணி நேரம் கலந்துரையாடி நிலமைகளை எடுத்துக் கூறி பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தேன். இக் கலந்துரையாடலின் போது, முஸ்லிம்கள் ஒரு போதும் எந்தவொரு மதத்தலைவரையும் தூற்றவோ, ஏசவோ, தாக்கவோ மாட்டார்கள் அது
அவர்களது பண்பு எல்லா மதத் தலைவரையும் மதிப்பதும் கெளரவிப்பதும் முஸ்லிம்களின் முக்கியமான பண்பு. அதன்படி அவர்கள் தேரர்களை அவமதிக்கும் வகையில் ஒரு போதும் செயற்பட மாட்டார்கள் என்பதையும் அவருக்கு தெளிவாக எடுத்துக் கூறினேன். அவற்றை அவர் ஏற்றுக்கொண்டார்.
பேருவளை, தர்காநகர், அளுத்கம உள்ளிட்ட பிரதேசங்களில் எனக்கு உறவினர்களும், நண்பர்களும் இருக்கின் றார்கள் அவர்கள் என்னுடன் தொடர்பு கொண்டு வழங்குகின்ற தகவல்களை உடனுக்குடன் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு வழங்குகின்றேன். பாதுகாப்பு ஏற்பாடுகளை மென்மேலும் பலப்படுத்து வதற்கு நாம் வழங்குகின்ற தகவல்களும் அவருக்கு உதவுகின்றன.
இதேவேளை ஆளும் கட்சி குழுக் கூட்டத்தில் துரதிஷ்டவசமான சம்பவம் இடம்பெற்றுவிட்டது. என்றாலும் முஸ்லிம்களையும் அவர்களது உடமையும் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என்பதையும் வலியுறுத்தியுள்ளேன் என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக