செவ்வாய், 24 ஜூன், 2014

எனது வீட்டிற்கு வரும் அனைத்து வாகனங்களையும் பொலிஸார் சோதனை செய்கின்றனர் அசாத் சாலி...!!!

தனது வீட்டிற்கு வருகைதரும் அனைத்து வாகனங்களும் பொலிஸாரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

காலையில் இருந்து துப்பாக்கி ஏந்திய இரண்டு பொலிஸார் எனது வீட்டிற்கு அருகில் இருந்தவண்ணம், வீட்டிற்கு வரும் அனைத்து வாகனங்களையும் சோதனையிடுகின்றனர்.

வாகனங்களை நிறுத்தி, வாகனங்களின் இலக்கங்களை பெற்றுக்கொண்டு, தேசிய அடையாள அட்டையை சோதனையிட்டு, அசாத் சாலி வீட்டிற்கு எதற்காக வருகின்றீர்கள்? என்ன விடயம் என கேட்கின்றனர்.

இதற்காகத் தான் பொலிஸார் இருக்கின்றனர். கொலை செய்பவர்களை பிடிப்பதற்கு முடியாது. அளுத்கம, பேருவளை மற்றும் பாணந்துறை ஆகிய நகரங்களை சேதப்படுத்தியவர்களை பிடிப்பதற்கு முடியாது.


நாட்டில் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தி, அனைவரும் அமைதியுடன் இருக்க வேண்டுமென தெரிவிக்கும் எம்மிடமே வருகின்றனர்.

பொலிஸார் எவ்வாறான செயலை செய்கின்றனர் எனப் பாருங்கள் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக