வெள்ளி, 20 ஜூன், 2014

முள்ளிவாய்க்கால் பகுதிகளில் எலும்புக்கூடுகளை தோண்டி எடுக்க நவனீதம்பிள்ளை முயற்சி....!!!!

இலங்கையில் போர் இடம்பெற்ற பகுதிகளில் மனித புதைகுழிகளை தோண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை முயற்சித்து வருவதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
குறிப்பாக நந்திக்கடல் மற்றும் வெள்ளாமுள்ளிவாய்க்கால் ஆகிய இடங்களில் மனித புதைகுழிகளை தோண்டி எடுத்து விசாரணை நடத்தும் முனைப்புக்களில் நவனீதம்பிள்ளை ஈடுபட்டுள்ளார்.

குறித்த இடங்களில் காணப்படும் மனித புதைகுழிகளை தோண்டும் நோக்கில் பிரதிநிதிகள் குழுவொன்றை இலக்கைக்கு அனுப்பி வைக்க நவனீதம்பிள்ளை முயற்சித்து வருகின்றார்.

இந்த நோக்கத்திற்காகவே விசாரணைக்குழுவில் இரசாயன பகுப்பாய்பு நிபுணர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

போர் இடம்பெற்ற வலயங்களில் லட்சக் கணக்கான மனி எலும்புக்கூடுகள் காணப்படுவதாக புலி ஆதரவாளர்கள் நவனீதம்பிள்ளையிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.


போரின் போது 147000 தமிழர்கள் கொல்லப்பட்டதாக பி.பி.சீ செய்தியாளர் பிரான்சிஸ் ஹரிசன் தெரிவித்திருந்தார்.

நவனீதம்பிள்ளை மிகவும் திட்டமிட்ட வகையில் பிரதிநிகளை நியமித்துள்ளார்.

வன்னியில் மனித புதைகுழிகளை தோண்டி, எலும்புக்கூடுகள் தொடர்பில் விசாரணை நடாத்தவே நவனீதம்பிள்ளை முயற்சித்து வருகின்றார் என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக