வியாழன், 19 ஜூன், 2014

உலக சமாதான சுட்டியில் இலங்கைக்கு 105ம் இடம்!!



உலக சமாதான சுட்டியின் அடிப்படையில் இலங்கை 105ம் இடத்தை வகிப்பதாக பொருளாதார மற்றும் சமாதானத்திற்கான நிறுவகம் அறிவித்துள்ளது.

உலகின் 162 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தென் ஆசியாவில் இலங்கை நான்காம் இடத்தை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த தர வரிசையில் இந்தியா 5ம் இடத்தையும், உலக அளவில் 143
இடத்தையும் வகிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

2008ம் ஆண்டு முதல் உலக அளவில் சமாதானத்திற்கு பாரியளவில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

உலகில் சமாதானமான நாடுகளாக டென்மார்க், ஒஸ்ட்ரியா, நியூசிலாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் பட்டியல்படுத்தப்பட்டுள்ளன.

சிரியா, தென் சூடான், ஆப்கானிஸ்தான், ஈராக், சோமாலியா, கோங்கோ ஜனநாயக் குடியரசு, மத்திய ஆபிரிக்க, பாகிஸ்தான், வடகொரியா உள்ளிட்ட நாடுகள் சமாதான வரிசையில் கடைநிலையை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக