இலங்கையில் இன, மத வாதத்தைத் தூண்டி கலவரங்களை ஏற்படுத்தி, வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டிருக்கும் பொது பலசேனா அமைப்பைத் தடைசெய்ய வேண்டும் என்று கோரியும், அந்த அமைப்பின் சூத்திரதாரியாகச் செயற்படும் அதன் செயலாளாரான வண.கலகொடவத்த ஞானசார தேரரைக் கைதுசெய்யும்படி கோரியும் பிரான்ஸில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆர்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
இலங்கையில் இருந்து சென்று பிரான்ஸில் குடியேறியுள்ள முஸ்லிம்களின் ஏற்பாட்டில் பாரிஸில் ஈபிள் டவருக்கு அண்மையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சுமார் இருநூறுக்கும் அதிகமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றினர்.
முஸ்லிம்களுடன் தமிழர்களும் சிங்களவர்களும் கூட இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர் என்று கூறப்பட்டது.
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்றுள்ள வன்முறைகள் குறித்து உரிய சட்டநடவடிக்கைகளை விரைந்து முன்னெடுத்து, சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்தக் கோரும் மகஜர் ஒன்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷக்கு முகவரியிடப்பட்டு, பிரான்ஸில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்குக் கையளிக்கப்பட்டதாக ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக