திங்கள், 9 ஜூன், 2014

அநுராதபுரத்தில் தேசிய பொசன் பண்டிகை விசேட போக்குவரத்து: 4000 பொலிஸார் கடமை...!!!!

அநுராதபுரத்தில் நடைபெறவிருக்கும் தேசிய பொசன் பண்டிகை கொண்டாட்டங்களை முன்னிட்டு இன்று (9) திங்கட்கிழமை முதல் 15ஆம் திகதி வரை பொசன் வாரமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அநுராதபுர மாவட்ட அரச அதிபர் மகிந்த செனவிரத்ன தெரிவித்தார்.

இப் பொசன் பண்டிகைக் காலத்தில் அநுராதபுரம், மிஹிந்தலை மற்றும் தந்தரிமலை பிரதேசங்களில் நாலாயிரம் (4000) பொலிஸாரைப் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டிருப்பதாக அநுராதபுரம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மகேஷ் சேனாரத்ன தெரிவித்தார்.

வட மத்திய மாகாண சிரேஷ்ட உதவிப் பொலிஸ் மா அதிபர், ரவி விஜயகுணவர்தன, வடமத்திய மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரஞ்சித் பத்மசிறி ஆகியோரின் ஒருங்கிணைந்த ஆலோசனைகளுக்கு அமைய
அநுராதபுரம், மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை ஆகிய பிரதேசங்களில் இப் பொலிஸார் கடமையிலீடுபடுவர். பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் பொசன் சேவைக் கடமைகளிலீடுபடும் ஏனைய உத்தியோகத்தர்களுக்கும் தங்குமிட வசதிகளைப்

பெற்றுக் கொடுக்கும் நோக்கில் அநுராதபுரம் மற்றும் கலன் பிந்துனுவெவ கல்வி வலயங்களைச் சேர்ந்த பதினைந்து (15) பாடசாலைகள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் குறித்த 15 பாடசாலைகளுக்கும் இன்று (9) திங்கட்கிழமை முதல் ஒரு வார காலத்திற்கு விடுமுறை வழங்கப் பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக