இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 33 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, பிரதமர் நரேந்திரமோடிக்கு, முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது - மீன் பிடித் தடைகாலம் முடிந்து தமிழகத்தில் இருந்து 7 விசைப்படகுகளுடன் மீன்பிடிக்கச் சென்ற 33 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றுள்ளனர். அவர்களை இலங்கை அரசு விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், இந்திய - இலங்கை
மீனவர்களின் பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு முயற்சி எடுத்த போதும் சிறைபிடிப்பு தொடர்கிறது. இலங்கை கடற்படையின் இதுபோன்ற தொடர் நடவடிக்கைக்கு இந்தியா கடும் அதிருப்தியை தெரிவிக்க வேண்டும். முன்னாள் பிரதமருக்கு பலமுறை நான் கடிதம் எழுதியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு உறுதியான முடிவு எடுக்கும் என தமிழகம் நம்பிக்கை கொண்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக