திங்கள், 5 மே, 2014

வவுனியா பொது வைத்தியசாலையிலும் தாதியர்கள் நேற்றையதினம் பணிக்கு சமூகமளிக்கவில்லை!!!



வவுனியா பொது வைத்தியசாலையில் பணிபுரியும் தாதியர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (04) பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர் என அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கத்தின் வவுனியா தலைவர் எஸ். சுதாகர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்
தாதியர்களுக்கு மகப்பேற்று பயிற்சி நெறி சுகாதார அமைச்சின் அனுமதியோடு ஆரம்பிக்கப்பட்டபோதிலும் இதுவரை அப்பயிற்சி ஆரம்பிக்கப்பட்டும் களப்பயிற்சிகளில் பயிற்சி வழங்கப்படாமையை கண்டித்து அகில இலங்கை ரீதியில் தாதியர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாக வவுனியா பொதுவைத்தியசாலை தாதியர்களும் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றோம். இதன் காரணமாக வைத்தியசாலையில் பணிகள் முடங்கியுள்ளது. எனினும் அவசர சிகிச்சை பிரிவு தாதியர்கள் மாத்திரம் தேவையின் பொருட்டு பணியில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்தார்.
இதேவேளை வவுனியா பொது வைத்தியசாலையின் விபத்துக்கள் பிரிவு உட்பட அனைத்து விடுதிகளிலும் தாதியர்கள் இன்மையால் சிகிச்சைகள் சீராக தமக்கு வழங்கப்படவில்லை என நோயாளர்கள் தெரிவித்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக