சனி, 17 மே, 2014

கணவர் நரேந்திர மோடியுடன் கோயிலுக்கு செல்ல வேண்டும் : ஜசோதா பென் ஆசை!!

கணவர் மோடியுடன் சென்று அம்பாஜி கோயிலில் சாமி கும்பிட விருப்பம் தெரிவித்திருக்கிறார் அவரது மனைவி ஜசோதாபென். பா.ஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வதோதரா தொகுதியில் எம்பிக்கான வேட்பு மனு தாக்கல் செய்த போது, தனது மனைவி பெயர் ஜசோதா பென் என்று குறிப்பிட்டார். அதன் பிறகுதான் அவர் திருமணம் ஆனவர் என்பது வெளிப்படையாக தெரிந்தது. ஆனால் கணவரை பிரிந்திருக்கும் ஜசோதா தனது சகோதரர்களுடனே
வாழ்ந்து வருகிறார்.
இதுபற்றி அவரது சகோதரர் அசோக் மோடி கூறும்போது, ‘நரேந்திர மோடி பிரதமர் ஆவதற்காக கோயிலில் பிரார்த்தனை செய்தார் ஜசோதா. குஜராத்தில் பனஸ்கந்தா பகுதியில் உள்ள அம்பாஜி அம்மன் கோயிலுக்கு கணவருடன் வந்து பிரார்த்தனை செய்ய விரும்புகிறார்.

இதுகூட மோடி வர சம்மதித்தால் மட்டுமே ஜசோதா நிறைவேற்றுவார். இதற்காக மோடியை அவர் வற்புறுத்த மாட்டார். கணவர் மோடியுடன் மீண்டும் சேர வேண்டும் என்பதற்காக கடந்த 40 வருடமாக அரிசி மற்றும் அரிசியால் செய்யப்பட்ட எந்த உணவையும் ஜசோதா சாப்பிடுவதில்லை. இந்த ஜென்மத்தில் இது நடக்காவிட்டால் அடுத்த ஜென்மத்தில் நடக்கும்Õ என்றார். மோடிக்கு தர்மசங்கடம் ஏற்படுத்தும் வகையில் எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருப்பதற்காக பத்திரிகையாளர்களையோ, மீடியாக்களையோ சந்திக்காமல் விலகி இருக்கும் ஜசோதா, வாக்கு எண்ணும் தினமான இன்று திருப்பதிக்கு சென்று சாமி கும்பிடுகிறார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக