சனி, 17 மே, 2014

விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் இருவர் உள்ளிட்ட 20 சந்தேக நபர்கள் மாத்தறையில் கைது......!!!!

விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் இருவர் உள்ளிட்ட 20 சந்தேக நபர்கள் மாத்தறையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தறை நகரில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித் திரிந்த போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பேர் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் என்று
தெரியவந்துள்ளது.

ஏனையோர் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த தமிழ் இளைஞர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணையின் போது மாத்தறை - நூபே இடையிலான நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகளில் ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணியாற்றுவது தெரியவந்துள்ளது.

எனினும் இவர்கள் விடுதலைப் புலிகளின் புதிய வலையமைப்பின் ஆலோசனையின் பேரில் உளவு நடவடிக்கைகளுக்காக மாத்தறை வந்திருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

யுத்த வெற்றி தொடர்பான அரசாங்க கொண்டாட்டங்கள் நாளை நடைபெறவுள்ளது. இதில் ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிலையில் மாத்தறையில் 20 தமிழ் இளைஞர்களின் கைது சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக