ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய துணைத் தூதரகம் மீது தலிபான் தீவிரவாதிகள் திடீரென தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஆப்கான் ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி மே 26-ந் தேதி பதவியேற்க உள்ளார். தமது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள பாகிஸ்தான், ஆப்கான், இலங்கை உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்களுக்கும் மோடி அழைப்பு அனுப்பி வைத்துள்ளார். ஆனால்
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இந்தியா வர விரும்பினாலும் அந்நாட்டு ராணுவம் தடுப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் உள்ள இந்திய துணைத் தூதரகம் மீது இன்று திடீர் என்று தலிபான் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதலை நடத்தியுள்ளனர். ஹெராத்தில் உள்ள துணை தூதரகத்துக்குள் உள்ளே நுழைந்த தலிபான் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த தற்கொலைப்படையினர் மூவர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.
இதைத் தொடர்ந்து தூதரகத்தை சுற்றி வளைத்த ஆப்கானிஸ்தான் ராணுவம் தற்கொலைப்படையினர் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் தூதரகத்தில் இருந்த பணியாளர்கள் பலர் படுகாயமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்தும் அங்கு துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக