வவுனியா தவசிகுளம் பகுதியில் வசித்து வந்த இளைஞன் ஒருவர் பயங்கரவாத புலனாய்வுத் துறையினரால் புதன்கிழமை(21.5) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். புலிகளை மீள உருவாக்க முயற்சித்ததாக கூறி வவுனியா நெடுங்கேணி பகுதியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட தேவிகன் அவர்களின் வாகன சாரதியாகவும் அவருடன் தொடர்பில் இருந்ததாகவும் கூறியே முத்துலிங்கம் கஜவர்மன் (வயது 22) என்ற இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட மேற்படி இளைஞன் மேலதிக விசாரணைக்காக கொழும்பு நான்காம் மாடிக்கு நேற்று
வியாழக்கிழமை கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
வியாழக்கிழமை கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக