வெள்ளி, 23 மே, 2014

விசா­ரணை குழுவை அமைக்கும் நட­வ­டிக்­கையில் நவிப்­பிள்ளை....!!!!

நிய­மிக்கும் பணியில் ஐ.நா.மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை தீவி­ர­மாக ஈடு­பட்­டுள்ளார்.
அடுத்­த­மாதம் முதல் வாரத்தில் விசா­ரணை குழு தொடர்­பான அறி­விப்பை நவ­நீ­தம்­பிள்ளை வெளியி­ட­வுள்­ள­தாக இரா­ஜ­தந்­தி­ர­வட்­டா­ரங்கள் தெரி­வித்­தன.

ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணைக்கு இலங்கை ஒத்­து­ழைக்­க­வேண்­டு­மென்று மனித உரிமை கண்­கா­ணிப்­பகம் சில தினங்­க­ளுக்கு
முன்னர் கோரிக்கை விடுத்­தி­ருந்­தது.

இதேபோல் விசா­ரணை குழு தொடர்­பான அறி­விப்பை நவ­நீ­தம்­பிள்ளை வெளியிட்­டதும் இந்த விசா­ர­ணைக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­மாறு அமெ­ரிக்கா, கனடா, பிரிட்டன் உட்­பட ஐரோப்­பிய நாடுகள் இலங்­கை­யிடம் கோர­வுள்­ள­தா­கவும், தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இலங்கை மீதான விசா­ர­ணைக்கு தேவை­யான நிதி­யினை ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை பெற்­றுக்­கொண்­டுள்ளார். இத­னை­ய­டுத்தே விசா­ர­ணைக்­கான குழு­வினை நிய­மிக்கும் நட­வ­டிக்­கையில் அவர் ஈடு­பட்­டுள்ளார்.

விசா­ர­ணைக்­கு­ழுவில் இடம் பெற­வுள்ள உறுப்­பி­னர்­களை தெரி­வு­ செய்யும் நட­வ­டிக்கை தற்­போது இடம் பெற்று வரு­வ­தாக இரா­ஜ­தந்­திர வட்­டா­ரங்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளன.

இதே­வேளை யுத்­தத்தின் இறு­திக்­கட்­டத்தில் இரண்­டு­த­ரப்­பி­ன­ராலும் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. விசா­ரணை யோச­னைக்கு இணங்க முடி­யாது என்ற அர­சாங்­கத்தின் முடிவு உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­ப­ட­வில்­லை­யென்று மனித உரிமை பேரவை தெரி­வித்­துள்­ளது.

ஆனாலும் ஐ.நா. மனித உரிமை பேர­வையில் உரை­யாற்­றிய அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இந்த விசாரணையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லையென அறிவித்தமையே எமது நிலைப்பாடாகும் என்று அமைச்சரவையின் பேச்சாளரும், அமைச்சருமான கெஹெலியரம்புக்வெல்ல தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக