வெள்ளி, 23 மே, 2014

தாதியர் சேவையில் 3067 வெற்றிடங்கள்....!!!!

தாதியர் சேவையில் காணப்படும் 3067 வெற்றிடங்களை நிரப்புவதற்காக 2500 பேரை பயிற்சியில் இணைத்துக்கொள்வதற்கான கடிதங்கள் அனுப்பப்பட்ட போதிலும் 2000 பேர் மட்டுமே பயிற்சிக்காக வந்துள்ளனர்.

எனவே மீண்டும் பயிற்சித் தாதியர்களை இணைத்துக்கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது என பிரதி சுகாதார அமைச்சர் லலித்
திஸாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் ஐதேக பாராளுமன்ற உறுப்பினர் அனோமா கமகே கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நாட்டில் தாதியர் சேவைக்கான வெற்றிடங்களை நிரப்புவதாயின் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதிக்கமைவாக செயற்படுவது அவசியம் என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக